இயற்கையின் மாற்றம் : மக்களே எச்சரிக்கை!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய தினம் மத்திய , சப்ரகமுவ , ஊவா , மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என்பதோடு , குறித்த சந்தர்ப்பங்களில் மின்னலால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேவேளை , அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் சுதந்திரதினத்தையிட்ட இந்திய பிரதமரின் வாழ்த்துச் செய்தி!
உரிமையாளர்கள் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த ஏற்பாடு!
அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு புதிய சட்டம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|