இயர்போன்’ பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை!
Friday, March 3rd, 2023குழந்தைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தைகள் அடிக்கடி இயர்போன் பயன்படுத்துவதால், காதுக்குள் காது மெழுகு தள்ளப்படுவதாகவும், இதனால் காது அழுகல், பூஞ்சை, காது டிரம் ஆகிய பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று காதில் பாதிப்பு ஏற்படுவதால், காது கேளாமை ஏற்படும் எனவும், எனவே கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது செவித்திறன் குறைபாடு ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுமாறு கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|