இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள்!

Thursday, June 27th, 2019

ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பை இன்று (27) நள்ளிரவுமுதல் முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணிமுதல் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ரயில்வே ஊழியர்கள் இன்று குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானியில், போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று (26) கைச்சாத்திட்டுள்ளார். அத்துடன், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சமிக்ஞை மேற்பார்வையாளர்கள் மற்றும் ரயில் மார்க்க பரிசோதகர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்களுக்காக, நாளைய தினம் (28) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்துக்கு வருகைதருமாறு ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உலகில் பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்த ராஜப...
மீன்பிடி தடைக்கான பிரதேசத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி முக்கிய முடிவு - நாரா நிறுவ...
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெ...

தமிழ்த் தலைமைகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இனியும் நாம் நம்பத் தயாரில்லை : கிளிநொச...
தேசிய தரப்படுத்தலில் முதலிடம் பிடித்த யாழ். மாவட்ட செயலகம் - 14 பிரதேச செயலகங்களுக்கும் சிறப்ப விருத...
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடர போவதில்லை - கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறை அ...