இன்று கார்த்திகை முதலாம் திகதி: ஐயப்ப பக்தர்களின் விரதம் ஆரம்பம்!

Wednesday, November 17th, 2021

இன்று கார்த்திகை முதலாம் திகதி: ஐயப்ப பக்தர்களின் விரதம் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவின் கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் ஆலயத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய செல்வது வழமை.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மரக விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் முதலாம் திகதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து கார்த்திகை அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து தத்தை  ஆரம்பிப்பார்கள்.

அதன்படி, சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதம் தொங்குகிறார்கள். இதில் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஐயப்ப பக்தர்கள் நாளை (18) அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து சரணகோஷம் எழுப்புகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரசியல் நோக்கங்களை ஆதரிப்பவர்களாக அல்லாமல் காலத்துக்கு பொருத்தமான கல்வி முறையை முன்வையுங்கள் - ஜனாத...
இலங்கையின் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதுவதற்கு நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் - தினேஷ...
இன்று சர்வதேச தொழிலாளர் தினம் - அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பல கூட்டங்கள், பேரணிகள் ம...