இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமைமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: