அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Saturday, May 29th, 2021

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களின் நலன்கருதி குறித்த இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளவுள்ள ஒரு சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வாக நேற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் மற்றும் உதவி நிர்வாக பொறுப்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

முன்பதாக கடந்த வருடம் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் தமது பயிர்களின் அழிவுக்கான இழப்பீடுகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட குறித்த விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த விவசாயிகளின் பயிரழிவுகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிரழிவுக்கான இழப்பீட்டை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தருவதாக உறுதியளித்திருந்தர்.

இதனடிப்படையில் குறித்த பயிரழிவுக்கான இழப்பீடு கோரி அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் அதற்கான அனுமதியை ஜனாதிபதி கொட்டபய ராஜபக்ச வழங்கியிருந்த நிலையில் தற்போது குறித்த இழப்பீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 155 வாழைப் பயர்ச் செய்கயாளர்களுக்கு சுமார் 25.5 மில்லியன் ரூபாவும் , 47 பப்பாசி செய்கையாளர்களுக்கு தலா 3 இலட்சம ரூபா வீதமும்  இழப்பீடு வழங்க அனுமதி கிடைத்திருந்தது.

இந்நிலையில் வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் கிழக்கு,சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களில் கறித்த பிரதேச செயலர்களுடன் இணைந்து கட்சியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் கறித்த பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள் ஆகியோரால் ஒருதொகுதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டிருந்ததனர்.

மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுகாதார நடைமுறைகள் இறுக்மடைந்துள்ளமையால் மக்களின் பாதுகாப்புக் கருதி ஏனைய விவசாயிகளுக்கான இழப்பீடுகள் அவர்களது வங்கி கணக்கில் வைப்பிலிடப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் தெரிவித்திருந்தமை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது பயிரழிவுக்கான இழப்பீட்டை பெற்றுத்தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா தொற்றின் மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை - 14 நாட்கள் கழிந்த பின்னர் இரண்டாவது பரிசோதன...
ஆயிரம் ரூபா வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு - தொழில் அமைச்சர் நிமல் சிறிபா...
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம்முதல் மொஸ்கோ – கொழும்பு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்!