நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்ய நேரிடும் – அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, August 22nd, 2021

அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறிவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நாடு முடக்கப்படுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அறிவிட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே, அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

அவ்வாறானதொரு தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும், நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்யநேரிடும்.

உதாரணமாக தாய்லாந்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது அந்நாட்டிலுள்ள ஆன்மீகத் தலைவர்கள், விகாரைகளில் இருந்த தங்கங்களை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து தியாகம் செய்தனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: