எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, July 14th, 2022

பத்தரமுல்லை பகுதியிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொல்தூவ சந்தி உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுள் இராணுவ சிப்பாயொருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் இரு ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

நேற்றிரவு வரையில் பொல்தூவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இளைஞர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, பிரதமரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி நேற்று கொழும்பு – ஃபிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 40 பேர் வரை காயமடைந்தனர்.

இதனிடையே, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியன தொடர்ந்தும் பொதுமக்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியே கடந்த 9 ஆம் திகதி குறித்த வளாகங்களை மக்கள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: