இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி பெருமானுக்கு கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் – மீலாதுன் நபி தின வாழ்த்து செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021

முஸ்லிம் மக்களின் கௌரவத்துக்குரிய முஹம்மது நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்கு கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என தாம் எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நபி அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல்களை கௌரவத்துடன் பின்பற்றிவரும் இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகவாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமிய பக்தர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றை எதிர்கொண்டு நாம் கடந்துச் செல்லும் இந்த கடுமையான காலத்தை வெற்றி கொள்வதற்கு நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொள்ளுமாறு முஸ்லிம் மக்களுக்கு நினைவூட்டுவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புரிந்துணர்வு, சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை, நீதி ஆகியவற்றை நபிகள் நாயகம் போதித்ததாகவும் மனித சமூகத்தை பண்பினாலும் அறிவுபூர்வமான அகிம்சையாலும் நிரப்புவதே அதன் நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் அவசியமற்றது - பெப்ரவரி 10 முதல் நடைமுறை!
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களு...
இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளார் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ க...