இந்த ஆண்டின் இறுதிச் சந்திர கிரகணம்!

Tuesday, July 16th, 2019

2019 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம், இன்று(16) நள்ளிரவில் ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி அதிகாலை 12.13 முதல் 5.47 வரை இதனைப் பார்வையிடலாம்.

பூரணை தினத்தில் இடம்பெறும் இந்த முழுமையான சந்திர கிரகணத்தை, இலங்கை மற்றும் இந்தியா உட்பட ஆசியாவின் அதிக நாடுகளிலும் மற்றும் அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளிலும் காண்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த சந்திர கிரகணம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: