மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் – சுகாதார அமைச்சு தகவல்!
Saturday, July 31st, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 7 இலட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளே இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 5 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கான இரண்டாம் செலுத்துகைக்காக குறித்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 5 இலட்சத்து 26 ஆயிரம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ளனர். இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், எஞ்சிய தடுப்பூசிகளை கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிவாரி மாணவர்கள் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த்த...
ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும் - வலி வடக்கு மீ...
கியூ.ஆர். குறியீடு - இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு!
|
|
|


