இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21 ஆவது கூட்டம் டாக்காவில் – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வங்களாதேஷ் விஜயம்!

Monday, November 15th, 2021

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2021 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கவிருக்கின்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 21வது கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொள்வார். அமைச்சர்கள் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக சிரேஷ்ட அதிகாரிகள் குழுக் கூட்டம் நடைபெறும்.

இந் நிகழ்வுகளின் பக்க அம்சமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: