பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய பதிலளிக்காதது கவலையளிக்கிறது – ஜாதிக ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர்!

Friday, May 6th, 2016

வடமாகாணத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி குறித்த பிரேரணைக்கு, நாட்டின் பொறுப்பு வாய்ந்தவர்களால் உரிய பதிலளிக்கப்படாமை கவலையளிப்பதாக, ஜாதிக ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாறான சூழலில், குறித்த சமஷ்டித் தீர்மானத்துக்கு எதிராக, மேல் மாகாண சபையில் யோசனை ஒன்றை கொண்டுவர, மாகாண சபை உறுப்பினர், நிஷங்க வர்ணகுலசூரியவால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட குறித்த யோசனைக்கு எதிராக ஏனைய மாகாண சபைகளில் யோசனை நிறைவேற்றவோ அல்லது நேரடியாக அது குறித்து பேசவே முதுகெலும்பு இல்லாமை கவலையளிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏனைய மாகாண சபைகளிடம் கோருவதாகவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts: