உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் திரிபோஷா உற்பத்தி – சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரப்பியாக திரிபோஷா வழங்கப்படும் என ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: