இந்துமக்கள் குறைகேள் அரங்கு கருத்துக்களத்தில் பேச அழைப்பு!

Friday, February 8th, 2019

இந்து சமயப் பேரவையால் நடத்தப்படும் கருத்துக் களத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி ஆராய்ந்து புத்திஜீவிகளும் சைவத் தமிழ் ஆர்வலர்களும் இந்துக்கள் அரசியல் அநாதைகளாகவே வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையை மாற்றுவதற்கு எமது பேரவை போன்ற அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

பௌத்த மதத்தைக் காப்பாற்ற சிங்கள அரசியல் தலைவர்கள் துணிவுடன் செயற்படுகின்றனர். முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க முஸ்லிம் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர். கிறிஸ்தவ மதத்தைப் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களும் இணைந்து செயற்படுகின்றனர்.

எனினும் இந்து மக்களைப் பாதுகாக்க எவரும் முன்வராதிருப்பது இந்துக்கள் அரசியல் அநாதைகள் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

இது சம்பந்தமான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் தங்களோடு மனம்விட்டுப் பேசிவிட்டு எமது செயற்பாடுகளை அமைப்பது அரசியல் தர்மத்திற்கு அமைவானதாக விடுகின்றது.

ஆகையால் எமது அழைப்பை ஏற்று எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் சந்தேகத்திற்குப் பதில் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை செயலாளர் சி.சக்திகிரீவன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை 10 ஆம் திகதிக்கு முன் தங்கள் சம்மதத்தைக் 076 168 8277, 076 622 4116 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நிகழ்ச்சி நிரலில் தங்கள் பெயரை இணைத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: