இத்தாலியில் இலங்கை சாரதிப்பத்திரத்திற்கு அனுமதி!

Monday, December 19th, 2016

இலங்கை போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பதிரத்தை இத்தாலியில் பயன்படுத்த முடியும் என இத்தாலிக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த நடைமுறை எதிர்வரும் வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இத்தாலியின் தலைநகரான ரோமிலுள்ள இலங்கை தூதுவரலாய காரியாலயம் அறிவித்துள்ளது.

இத்தாலியிலுள்ள இலங்கையர், இந்நாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துவது தொடர்பிலான அனுமதி தொடர்பில் இலங்கை, இத்தாலி அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதை அடுத்து குறித்த சலுகை கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி இத்தாலியிலுள்ள சுமார் 11,000 இற்கும் மேற்பட்ட இலங்கையருக்கு இச்சலுகை கிடைக்கும் என தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Sri Lanka Driving License

Related posts: