இணைய வசதிமூலம் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பம்

Thursday, November 22nd, 2018

இலங்கையில் முதல் தடவையாக கணினி வலையமைப்பூடாக நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்கள்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கால விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையக் கணினி வசதியின் ஊடாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த வசதிகளை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

1960 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை எதிர்வரும் 29ம் திகதி முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் பெற்றுக் கொள்ள முடியும்.

இதே போன்று இலங்கையில் மாகாண ரீதியான வலய அலுவலகங்களிலும், மாவட்ட ரீதியில் மாவட்ட அலுவலகங்களிலும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் இணையக் கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது அந்த அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை மாத்திரமே பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளே காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்க தீர்மானம்!
யானை - மனித மோதலை கட்டுப்படுத்த தேசிய கொள்கை தயாரிப்பு - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நட...
சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31 ஆம் திகதிக்குள் நடவடிக்கை - அமைச்சர் டிரான் அ...