இணையத்தின் மூலம் கடவுச் சீட்டுக்களை அனுப்ப நடவடிக்கை!
Friday, April 21st, 2017
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நவீனப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் கடவுச் சீட்டுக்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை முன்னெடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணத்தை கடன் அட்டைகள்(credit card) மூலட் வழங்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இவ்வருட இறுதிக்குள் குறித்த இந்த வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
|
|