இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை இல்லை என குற்றச்சாட்டு!

Sunday, October 1st, 2017

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஒற்றை ஆட்சியும், பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையும் இல்லாதுசெய்யப்பட்டுள்ளதாக மஹாநாயக்க தேரர்கள் சிலர் அங்கத்துவம் வகிக்கும் பௌத்தசாசன செயலணி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசியலமைப்பில் இலங்கை குடியரசு புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் என்ற வாக்கியத்தில் இலங்கை குடியரசு என்ற பதத்திற்கு பதிலாக, இலங்கை என்ற பதம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் புத்தமதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரச அனுசரணை அகற்றப்பட்டுள்ளதாக பௌத்த சாசன செயலணி குற்றம் சுமத்தியுள்ளது.

தற்போதைய அரசியல் அமைப்பின் தமிழ்ப் பதிப்பில் ஏகீய ராஜ்ய என்ற சிங்கள பதம் ஒற்றையாட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், புதிய அரசியல் அமைப்பு யோசனையில் அந்த பதம் ஒருமித்த நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக ஐக்கிய சமஷ்டி என்பதே அர்த்தப்படுத்தப்படுவதாக மகாநாயக்கர்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், அரசியல் அமைப்பு தொடர்பில் தமிழ்ப் பதிப்பை விட சிங்கள பதிப்பே, அதிகாரபூர்வமானது என்பது புதிய யோசனையில் குறிப்பிடப்படவில்லை

மேலும் வடகிழக்கு இணைப்பு குறித்து இணைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பிரிவினைவாதிகளின் தனிநாட்டு கோரிக்கையை சட்டபூர்வமாக்கும்  முயற்சி என்றும் மகாநாயக்கர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரிபுபடுத்தப்பட்ட அரசியலமைப்பை உருவாக்க வேண்டாம் என திரைநிக்காய மஹநாயக்க தேரர்கள் வழங்கிய ஆலோசனை ஆரம்பம் முதலே கவனத்தில் எடுக்கப்படவில்லை. பிரிவினைவாதத்துக்கு மீண்டும் வழியேற்படுத்தம் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதை தவிர்க்குமாறு அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாக மஹாநாயக்கர்கள் அந்த  அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்

Related posts:


அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தே...
மருத்துவக் கழிவுகளை ஏற்றிச் செல்ல பழைய வாகனங்களைப் பயன்படுத்தவும் - வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப...
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி ...