இடர்களை கழைந்து மீண்டும் சுபீட்சமான சகவாழ்வு திரும்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் – புத்தாண்டு செய்தியில் அரசியல் தலைவர்கள்!

Tuesday, April 14th, 2020

பிறந்துள்ள தமிழ் – சிங்கள புத்தாண்டு பெரும் இடரின் மத்தியில் பிறதிருந்தாலும் அந்த இடர்களை கழைந்து மீண்டும் சுபீட்சமான சகவாழ்வு திரும்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என இலங்கையின் அரச தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் சித்திரையின் முதல் நாளை புத்தாண்டாகக் அந்தவகையில் கொண்டாடுகிறார்கள். பிறந்துள்ள இந்த புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்குமான தருணமாகும். எனினும், எதிர்பாராத விதமாக உலகம் எதிர்நோக்கியுள்ள வைரஸ் தாக்கம் காரணமாக எமது முன்னோர்கள் கண்டிராத பாரிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். எனவே வீட்டிலிருந்தவாறே அனைவரும் புத்தாண்டை கொண்டாடுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளாரர்,

இதனிடையே – பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வினை எடுத்தியம்புவதாக அமைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீட்டினுள் இருந்தபடியே இந்த சம்பிரதாயச் சடங்குகளை நிறைவேற்றி எமது மரபுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக கடைபிடித்து வந்த பழக்கவழக்கங்கள் மூலம் வெளிப்பட்ட தேசிய உணர்வுகளின் பெறுமானத்தை இன்று முன்னெப்போதுமில்லாதவாறு நாம் உணர்கிறோம்.

சம்பிரதாய ரீதியாக நாட்டினர் மத்தியில் காணப்பட்ட அந்த பிணைப்பு, ஒற்றுமை, மக்கள் கலாசாரத்தின் பலம் காரணமாகவே இன்று முழு உலகையும் திகைப்படையச் செய்துள்ள கொடிய தொற்றுநோக்கு நாம் சிறப்பாக முகங்கொடுக்கிறோம். எனவே புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறும் பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் –

வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது புதுவருட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்,

இயற்கையின் அனர்த்தங்களும், பெருநோய்கள் தந்த பேரிடர்களும் போரின் அவலங்களும் கடந்த காலங்களில் எமது மக்களை சூழ்ந்து நின்ற போது, அவைகளில் இருந்து மீள் எழுச்சி கொண்ட வரலாற்றை கொண்டவர்கள் எமது மக்கள்.

இன்று பிறந்த சித்திரை புத்தாண்டின் மகிழ்வை எமது மக்கள் அன்பவிப்பத்தற்கு பெருங்கொடு நோயொன்று பலத்த சவாலாக இருந்து வரினும், இதையும் கடந்து, சூழ்ந்து வரும் தடைகளையும் துயர்களையும் உடைத்து,. அழகார்ந்த வாழ்வில் நீடித்த நிம்மதியை எதிர்கால பொழுதுகள் ஒவ்வொன்றும் தரும் என்ற மன வல்லமையோடு சமகாலத்தை ஒற்றுமையுடன் வென்று எதிர்காலத்தை வரவேற்போம் என்றும் தெரிவித்துள்ள அவர் எவரும் எவரிடமும் கையேந்தி நிற்காமல் தமது சொந்த கால்களிலேயே எமது மக்கள் நிற்கும் நிலைமையை உருவாக்குவதுடன வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts: