பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது – நிதி அமைச்சர்!

Saturday, April 8th, 2017

பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, வௌியான தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய புறக்கோட்டை பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த வர்த்தகர்களிடம் அமைச்சர் விசாரணை செய்த சந்தர்ப்பத்தில், அரிசிப் பற்றாக்குறை எதுவும் நிலவவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியூதினும் உடனிருந்ததாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts:

புதிய அரசமைப்புக்கான பொது வாக்கெடுப்பு இவ்வருடம் நடக்கும் மகிந்தானந்த அழுத்கமகே தகவல்!
கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு புதிய போக்குவரத்து கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்...
விசேட விடுமுறையான இன்று வழமைபோன்று வங்கி மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகள் ...