ஆறு மணிநேரம் செயல் இழப்பிற்கு பின்னர் வழமைக்கு திரும்பின!

Tuesday, October 5th, 2021

பேஸ் புக் வட்ஸ்அப் ஆறு மணித்தியாலங்கள் செயல் இழந்த நிலையிலிருந்த பேஸ்புக் வட்ஸ்அப் இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.சுமார் ஆறுமணித்தியாலத்திற்கு மேல் பேஸ்புக் வட்ஸ்அப் இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களை பயனாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.இந்த மூன்று சமூக ஊடகங்களும் பேஸபுக் நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.சமூக ஊடக செயல் இழப்புகளை கண்காணிக்கும் டவுன்டிடக்டர் இதுவரை ஏற்பட்ட செயல் இழப்புகளில் இதுவே மிகப்பெரியது என தெரிவித்துள்ளது.10.6 மில்லியன் பயனாளர்கள் இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது என டவுன்டிடக்டர் தெரிவித்துள்ளது.2019லேயே இறுதியாக பேஸ்புக் இவ்வாறாதொரு செயல்இழப்பை சந்தித்திருந்தது.செயல் இழப்பிற்காக பேஸ்புக் மன்னிப்பு கோரியிருந்தது

Related posts:

கொரோனா தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக்க நாட்டு மக்கள் பொது நோக்குடன் ஆதரவு வழங்க வேண்டும் – அ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமெ...
406 புதிய ​வைத்தியர்கள் நியமனம் - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் - அமைச்...