ஆட்கடத்தல் மற்றும் காப்புறுதி மோசடியின் பின்னணியில் அரசியல்வாதிகள் – அமைச்சர் மனுச நாணயக்கார தகவல்!
Sunday, June 11th, 2023வெளிநாடுகளுக்கு தொழில் நிமிர்த்த செல்லுகின்ற தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமான காப்புறுதி வழங்கப்படுவதுடன் ஆட்கடத்தல்களின் பின்னணியில் இலங்கையிலுள்ள சில அரசியல் வாதிகள்
செயற்படுவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணி தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பாக குவைத் நாட்டில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் இந்தக் கடத்தலில் சிக்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதனை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வெளி நாட்டிற்கும் தொழிலாளியாக செல்லும் போது அந்த காப்புறுதியின் மூலம் காப்புறுதித் தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மனுச நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையிலுள்ள காப்புறுதி அமைப்பில் இதுவரை 3ஆயிரத்து 731 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|