யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் புனர்வாழ்வு நிலையம் ஆரம்பம்!

Thursday, August 16th, 2018

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் புனர்வாழ்வு நிலையம் உள்ளிட்ட பல மருத்துவ வசதிகளை ஆரம்பித்து வைத்தார்.

இன்று (16) காலை 10.00 மணியளவில் யாழிற்கு வருகை தந்த அமைச்சர், யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பிரதான மருந்தகத்தினையை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் குவைத் அரசாங்கத்தினால் சுமார் 530 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள மீள்வாழ்வு நிலையத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.

அதன்பின்னர், யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்களுக்கான தங்குமிடம் விடுதியினை திறந்து வைத்ததுடன்,  பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மத குருமார்கள் உட்பட சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சின் பிரதி அமைச்சர் பைசர் காசிம் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு நினைவுப் பரிசிலும் வழங்கி கௌரவித்தார்.

Related posts: