அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, May 2nd, 2021

அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை மருத்துவமனைகளிற்கு கொண்டு செல்வதற்கு அனுமதிப்பமத்திரம் எதுவும் அவசியமில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அவசரமாக நோயாளிகளை மருத்துவமனைகளிற்கு கொண்டு செல்வதற்கு பொலிஸாரிடம் அனுமதிபெறவேண்டியதில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சிறிய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான தேவை காணப்பட்டால் பொலிஸாரை தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தனிநபர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாது என்றும் வேறு ஒரு வீட்டிற்கு செல்ல முடியாது எனவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: