அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் விலைகளிலும் மாற்றம்!

அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சநேற்று (30) அறிவித்துள்ளது. அண்மையில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
எனவே அதன் ஒரு பகுதியாகவே அறுவைச் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை – வடக்கு மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்...
நாட்டு மக்களிடம் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச - நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ச – ஜனாத...
|
|