அரியாலை இளைஞர் படுகொலை –  சந்தேகநபர் கைது!

Friday, November 3rd, 2017

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவரே இன்று(3) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது கொலை செய்வதற்கு உபயோகித்ததாகக் கூறப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன சிறப்புஅதிரடிப் படையினரின் முகாமில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இபுப்பினும் இது தொடர்பான தகவல்களை பொலிஸார் இதுவரைஉறுதிப்படுத்தவில்லை.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 7 பேரிடம் வாக்குமூலம்பெறப்பட்டு அதில் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை இன்றுநீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts: