பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை முடிவுக்கு கொண்டுவர செயற்றிட்டம்!

Friday, September 28th, 2018

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயற்றிட்டமொன்றை மதப் பிரமுகர் குழுவினர் மற்றும் தொழில்சார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று ஆரம்பித்திருக்கின்றது.

பிள்ளைகள் மீதான கொடுமையை நிறுத்துவது தொடர்பான அமைப்பே இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பல தசாப்தங்களாக இந்தப் பிரச்சினை பாடசாலைகள் பலவற்றில் காணப்பட்டது. கல்வி முறைமையிலிருந்து இதனை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் தோல்வி கண்டிருந்தன.

பிள்ளைகள் மீதான வன்முறையான உடல் ரீதியான துன்புறுத்தல் பாரிய உணர்வு பூர்வமானதும் உளவியல் ரீதியானதுமான வடுக்களை ஏற்படுத்துகின்றது.

அச்சுறுத்தும் தன்மை, ஆக்ரோஷமான நடத்தை மற்றும் பல்கலைக்கழகங்களில் பகிடி வதை போன்ற பாதிப்புகளும் இதற்கான காரணமென அறிவியல் ரீதியான காரணங்களென நிரூபிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ரீதியாக இலங்கை உட்பட 131 நாடுகள் உடல் ரீதியான துன்புறுத்தல்களை தடை செய்வது தொடர்பான வழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இந்த உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இளம்பிள்ளைகள் மனங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

Related posts:


மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் - மாவட்ட அ...
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு ...
நாட்டின் சில பாகங்களில் இன்று 100 மில்லமீற்றருக்கும் அதிக பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்...