அரிசி ஆலைகளுக்கு தனியான கூட்டுறவுச் சம்மேளனங்கள் – வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர்!

Tuesday, May 22nd, 2018

கூட்டுறவுச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அரிசி ஆலைகளுக்கெனத் தனியான கூட்டுறவுச் சம்மேளனங்களை அமைப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.

அனேகமான கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி ஆலைகளைத் தொடர்ந்தும் இயங்க வைப்பதற்கு வசதியாகவும் இந்த சம்மேளனங்கள் உருவாக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் அரிசி ஆலைகளை வரும் காலத்தில் மிகவும் நவீனத்துவம் கொண்ட ஆலைகளைத் தரம் உயர்த்தி செயற்படுத்தி வைப்பதற்கே திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

புதிதாக ஆலைகளை அமைக்கும் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது உள்ள ஆலைகளைச் செயற்பட வைக்கவும் ஆலைகளுக்கெனத் தனியான சம்மேளனங்களை உருவாக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அரிசி ஆலைகள் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் அதிக வருமானத்தைப் பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: