அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் – அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை – நிர்ணயவிலையில் வழங்க முடியும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, February 16th, 2021

பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், பாரிய அளவிலான ஆலை உரிமையாளர்களும், நெல்லை கொள்வனவு செய்பவர்களும் கடந்த ஆண்டுகளைப்போல நெல்லை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரிசி உற்பத்தியாளர்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறி  கூறுகையில் –

தற்போது 3 இலட்சம் மெற்றிக் டன் அளவில் நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்ததுடன் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள விலைக்கேற்ப அதனை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அரசிக்கான நிர்ணயவிலையினை வழங்க முடியும் எனவும் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: