அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு!

Friday, July 23rd, 2021

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில்  உள்ள வீடொன்றில் நேற்றுஇரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவது –

நேற்று இரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர். இதனால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்தவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நிகழும்போது விழித்துக்கொண்ட வீட்டுக்காரர்களும் அயல்வீட்டினரும் இணைந்து குறித்த தாக்குதலாளிகளை துரத்தியவேளை அவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

வாழ்வாதார உதவிகள் கூட தற்போது கிடைப்பதில்லை - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை மத்தி மக்கள் சுட்டி...
பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வட் வரி சலுகையை பெற்றுக் கொடுப்பதில்லை!
பாரத தேசம் கொரோனாவின் பிடியிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் - யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு...