அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது!

Friday, July 26th, 2019

மாகாண சபைகளின் ஒப்புதல் இல்லாமல் அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அறிவித்துள்ளது.  

இதுதொடர்பான தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் நாடாளுமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

அரச காணிகள் விசேட சட்டமூலத்தின் சரத்துகள் ஊடாக பேசப்படுகின்ற விடயங்கள், மாகாண சபை விடயங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால், குறித்த சட்ட மூலம் தொடர்பாக மாகாண சபைகளின் ஆலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது, உயர்நீதிமன்றின் நிலைப்பாடாகும்.

இதனால் குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இணைக்க முடியாது என்று, பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

Related posts: