அரச இணையத்தளங்கள் தொடர்ந்தும் ஆராயப்படும்!

Saturday, May 20th, 2017

இலங்கையின் அரசின் அனைத்து இணையத்தளங்களும் பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, தகவல் தொடர்பாடல் முகவராண்மை தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள அரசாங்க இணையத்தளங்கள் அனைத்தும், சைபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமையை அடுத்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நடவடிக்கை, இலங்கை கணினி அவசர தயார் நிலை பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்துடனும் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சுடனும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க இணையத்தள‍ங்களின் பாதிப்பு மதிப்பீடுகள் மற்றும் அணுகுமுறைகள் போன்றவை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது

Related posts: