பேரறிவாளனுக்கு ஒருமாத பிணை ?

Thursday, August 24th, 2017

 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேரறிவாளனின் தாயார் விது;த்திருந்த கோரிக்கையை ஏற்று இவரை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதற்கான அரசாணை தற்போது வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல கால விண்ணப்பங்களுக்கு பிறகு பேரறிவாளனுக்கு 26 வருடங்களுக்குப் பிறகு ஒருமாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு மாதகாலம் அவர் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

Related posts: