அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் – பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2024

ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்தின் ஊடாக நாடு இன்று முன்னோக்கி வந்துள்ளது. அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் என தெரிவித்துள்ள  பிரதமர் தினேஷ் குணவர்தன, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கும் நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. கிராமத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகளின் உதவி தேவை. வன்முறையற்ற நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பும் அதிகாரிகளாகிய உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்

அன்று 1971 கிளர்ச்சியின்போது, பிரதேச செயலாளர்கள் வெளியேற வேண்டியிருந்தது. அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் படிப்படியாகத் தீர்க்க ஒரு அரசாங்கமாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த அரச பொறிமுறையில் உங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை உண்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் உங்கள் அனைவரது வலிமையும் உறுதியும் வேண்டும்” என்றும் தெரிவித்த. பிரதமர் ”இந்த இடத்தில் அனுபவமுள்ள அரச அதிகாரிகள் குழு உள்ளது. அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் தீர்மானங்களையும் திட்டங்களையும் தொடர்ச்சியாக அமுல்படுத்தும் குழு என்றே கூறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: