நாளாந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய எரிபொருள் கையிருப்பில் உண்டு –  அமைச்சர் அர்ஜுன!

Tuesday, November 7th, 2017

பாவனையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று பெற்றோலியவளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் எரிபொருள் தொடர்பான குழப்பநிலையை சிலர் தோற்றுவித்ததினாலேயே பெற்றோல் போன்ற எரிபொருளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிலர் பெற்றோல் தொடர்பில் ஏற்படுத்திய குழப்ப நிலையின் காரணமாக பலர் போத்தல்களிலும் , கான்களிலும் அளவுக்கதிகமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை கொள்வனவு செய்து வெளியில் விற்பனை செய்துள்ளனர். எரிபொருளுக்கான போலியான நெருக்கடி நிலையை ஏற்படுத்தி சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டமையினால் கான்களுக்கும் போத்தல்களுக்கும் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.

Related posts:

இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது - ஜ...
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணியில் வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கு நட...
அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் - தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அ...