அரசியல் சீர்திருத்தத்திற்கு ஜனாதிபதி இணங்கப்போவதில்லை –  அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க!

Wednesday, February 22nd, 2017

நாட்டில் புதிதாக ஒரு அரசியல் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்கப்போவதில்லை என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

புதிதாக கொண்டு வரப்பட உள்ள அரசியல் சீர்த்திருத்தத்தில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தவொரு புதிய செயற்திட்டமும் உள்ளடக்கப்படவில்லை. அவ்வாறு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்க மாட்டார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு யோசனைகளும் கொண்டு வரப்போவதில்லை.

s.b.dissanayake

Related posts: