குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றுமுதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானம்!

Monday, March 11th, 2024

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துாவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை, குறிப்பாக சாலை மறியல் சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லாமை, கடுமையான குற்றவாளிகளை கைது செய்யும் பணியை இலகுவாக்கும் காரணங்களுக்காக இராணுவத்தினர் அழைக்கபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்றும் அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை – பிரதமர் தெரிவிப்பு!
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு - புதிய வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பித்து வைப்பு!
கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளின் கூரைகளுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு - மின் மற்றும் ...