யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு!
Saturday, February 18th, 2017
யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (கிளினிக்) காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிரு ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில் உள்ள பிரபல்யமான தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான நிலையில் உள்ள மருந்துகளே நோயாளிகளுக்கு விற்பனை செய்வதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட மருந்துவில்லைகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன.
இதில் நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துவில்லைகளே அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இதனையடுத்து குறித்த மருத்துவ மனையில் இருந்து மருந்து வில்லைகள் அப்புறப்படுத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்தும் தேவை - ஈ.பி.டி.பி வேண்டுகோள்!
இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்!
இலங்கை தனது முதல் அணு மின் நிலையத்துக்கான ஐந்து சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளது!
|
|
|
“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன...
சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது - இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்க...
மூச்சு எடுப்பதற்கு சிரமம் - மூளாய் – வேரம் பகுதியில் பெண் ஒருவர் பலி - மோட்டார் சைக்கிளில் பயணித்த க...


