அரசின் சட்ட அறிவுறுத்தல்கள் நிதி நிறுவனங்களுக்கு கிடையாதா? நுண் நிதி நிறுவன வசூலிப்பாளர்களால் அவமானப்படும் மக்கள் பரிகாரம் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

Sunday, May 17th, 2020

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நுண் நிதி நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் மூலம் கடன் வசூலிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் இன்னமும் தொழில் நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பாத தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கும் அவமானங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுவதாக கவலை வெளியிட்டுள்ளதுடன் கடனை மீளச் செலுத்துவதற்காதன கால அவகாசத்தையும் பெற்றுத்தருமாறு துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதிமுதல் நாட்டினை வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாடுகளை அரசு முன்னெடுப்பதற்காக கூறி ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தரியிருந்தது.

இந்நிலையில் நுண்நிதி நிறுவன ஊழியர்கள் மக்களிடம் கடன் வசூலிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனாலும் கொரோனோ வைரஸ் தாக்கத்தின் பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் அன்றாடம் தொழில் செய்து வாழ்வை நடத்திவரும் பல்வேறு குடும்பங்கள் தமது வாழ்வாதார வருமானங்களை இழந்துள்ள நிலை காணப்படுகின்றது.

அத்துடன் குறித்த தொழிலை முன்நிறுத்தியே தாம் நுண்கடன் நிறுவனங்களில் கடன்களை பெற்றுள்ளனர் என்றும்; தற்போது தொழில் செய்யும் ஏதுநிலை முழுமையாக கிடையாதுள்ளமையால் கடனை மீளவும் செலுத்துவதில் வருமானம் அற்ற நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் கடன் வசூலிக்கும் நிறுவனங்கள், வங்கிகள் தற்போதைய மக்களின் நிலை கருதி கடனை அறவிடாமல் கால அவகாசம் ஒன்றினை வழங்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை பொருட்படுத்தாது இந்த வசூலிப்பு நடைபெறுகின்றது என்று சுட்டிக்காட்டிய மக்கள்  அரசாங்கத்தின் சட்ட வரைமுறைகள் அறிவித்தல்கள் எதுவும் இந்தகைய நிதி நிறுவனங்களுக்கு இல்லையா அல்லது அவர்கள் அரசின் அறிவித்தல்களை அலட்சியம் செய்கின்றனரா என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பிபுகின்றனர்.

இந்நிலையில் தம்மிடம் அறவிடப்படும் கடன் பணத்திற்கு இயல்பு நிலை சீராக வரும்வரை கால அவகாசம் ஒன்றினை வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஆனால் குறித்த நிதி நிறுவனங்களின் நிதி வசூலிப்பாளர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளையும் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களை கூறி அவமானப்படுத்தும் வகையிலும் நடந்துகொள்வதுடன் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களை மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts: