அரசாங்கத்திடம் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை!

Saturday, July 27th, 2019

அரசாங்கம் பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை தமக்கும் வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய உள்ளவாரி மற்றும் வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ. பட்டதாரிகளே இவ்வாறு தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரச நியமனத்தில் 2017 ஆம் ஆண்டு 6 ஆம் மாதத்திற்குப் பின்னரான உள்வாரிப் பட்டதாரிகள் மற்றும் எச்.என்.டீ.ஏ பட்டதாரிகள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் பலருக்கு நியமனம் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அரசின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு, அவர்கள் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடாத்தியிருத்தனர்.

இதன் போது பட்டதாரிகளிடத்தே பாரபட்சம் காட்டாமல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: