அமைச்சர் விஜயதாசவை நீக்க முயற்சி!

Sunday, August 13th, 2017

அமைச்சர் விஜயதாசவை நீக்குவதற்கு ஐ.தே.க. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை தீர்மானங்களுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவது மற்றும் அமைச்சரவை முடிவுகளை விமர்சித்தல், அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் போன்ற காரணங்களுக்காக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் தாமதப்படுவதற்கு விஜயதாச ராஜபக்ஷவே காரணம் என்று இதற்கு முன்னரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கருத்து மேலதிக விமர்சனங்களை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: