அமைச்சர்கள் டக்ளஸ் – விதுர விக்ரமநாயக்க ஆகியோரின் மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச இந்து மத பீட செயலாளர் பாராட்டு!

Friday, October 14th, 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நேரடியாகச் சென்று மத நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக எடுத்துவரும் முன்மாதிரியான நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மைக்காலமாக திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் தொல்லியல் தினைக்களம் சம்பந்தமாக சில பிரச்சினைகளும் வியாபார வேலைகள் சம்பந்தமாகவும் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இது தொடர்பாக பல இந்து அமைப்புகள் ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோரிடம் எடுத்துச் சென்றனர்.

இதன் அடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுரவிக்ரமநாயக்க இருவரும் நேரடியாகவே திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதிக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த வியாபார தளங்கள் சம்பந்தமாக கலந்துரையாடிய பின்னர் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படா வண்ணம் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதேபோன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலய நிர்வாகத்திடமும் தற்போதைய அரசாங்கம் எந்த மதத்தையும் பாதிக்கும் வகையில் செயற்படாது எனவும் அந்தந்த மதங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட அரசாங்கம் திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்த கருத்துகள் வரவேற்கத்தக்கவை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் - ஊடகப் பேச்சாளர...
விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சரவைப் பேச்சா...
வவுனியா மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை –...