அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளது – சிறுவர்களின் சார்பில் கடமைகளை மீள ஆரம்பியுங்கள் – ஆசிரியர், அதிபர்களிடம் அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள்!

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடுத்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள கடினமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான ஆசியர்களும் அதிபர்களும் இணையவழி கற்கைக்கு திரும்புவார்கள் என அவர் நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அமைச்சரவை அங்கீகரித்துள்ள நிலையில் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வது எனஅதிபர் ஆசிரிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோட்டையில் இருந்து யூனியன் பிளேஸ் வரை படகு சேவை ஆரம்பம்!
திங்களன்று சில பாடசாலைகள் மூடப்படும்!
10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம் - லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!
|
|