அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி குறைவடைந்தது!

Friday, May 13th, 2022

இன்றையதினம் உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை  365 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.

உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியிருந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 15 ரூபாவினால் குறைவடைந்துள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, மக்கள் வங்கி, DFCC வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி என்பன இத்தகைய விற்பனை பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. இதேவேளை, நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய,  டொலரொன்றின் விற்பனை பெறுமதி 377 ரூபா 49 சதமாக பதிவாகியிருந்ததுடன், கொள்முதல் பெறுமதி 364 ரூபா 22 சதமாக பதிவாகியிருந்ததமை குறிப்பிடத்தக்கது

Related posts: