அமெரிக்கப் படையால் கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு இயலுமை விருத்தி செயற்பாடு!

Friday, February 15th, 2019

கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு இயலுமை விருத்தி செயற்பாடுகளை அமெரிக்காவின் கடலோர பாதுகாப்பு படையினர் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

துறைமுகத்தின் பாதுகாப்பு திட்ட நடைமுறைப்படுத்தல் மற்றும் பயிற்சிகளின் ஊடாக பாதுகாப்பு பங்காளிகளின் இயலுமையை விருத்தி செய்தல் என்ற நோக்கில் இந்த செயற்பாடு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக தீவிரவாதம் மற்றும் ஏனைய அச்சுறுத்தல்களில் இருந்து கொழும்பு துறைமுகம் பாதுகாப்பு பெறுவதை அதிகப்படுத்துவது மாத்திரம் இன்றி, ஏனைய நாடுகளுடனான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் நாட்டின் நலனுக்கு பங்களிப்பு செய்யவும் இலங்கையின் கடற்பாதுகாப்பு முக்கியமானது என்று அமெரிக்காவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: