அமரர் வைத்திய நிபுணர் ரகுபதி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதை!

Wednesday, December 12th, 2018

 
மாரடைப்பு காரணமாக காலமான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

வைத்தியர் ரகுபதி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்துடன் அவருக்கு எமது இதய அஞ்சலிகளை செலுத்துதோடு அவரது இழப்பால் துயருறும் உற்றார் உறவினர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இணுவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பேற்படுத்தியிருந்தார். உடனடியாக நோயாளர் காவு வண்டி அவரது வீட்டுக் சென்றது. நோயாளர் காவு வண்டியில் அவர் ஏறி உட்கார்ந்த பின்னர் சுயநினைவிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சையளித்த போதும், அவரை காப்பாற்ற முடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

நோயாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் இவர் முன்னர், முல்லைத்தீவு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராகவும், வைத்திய நிபுணராகவும் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: