அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை!

Friday, July 13th, 2018

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்தவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம்  இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் அன்னாரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

வலிகாமம் மேற்கு சுழிபுரத்தில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இன்றையதினம் இடம்பெற்ற 29 ஆவது நினைவு தின அனுஷ்டிப்ப இடம்பெற்றது. இதன்போது உருவச்சிலைக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

37055938_1028640740618933_8112470739925336064_n

37027466_1028640930618914_9024489951261097984_n

37088857_1028640973952243_6207134672309190656_n

Related posts: