அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்கள் நலனுக்காக முறையாக பயன்படுத்துவது அவசியம் – ஜனாதிபதி

உரிய அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மக்கள் நலன்கருதி முறையாக செலவளிப்பது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கில் அமுலாகும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் போன்றவை பற்றி ஆராயும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.
வட மாகாணத்தில்; செயற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் 2017 ஆம் ஆண்டில் வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி செலவிடப்படும் விதம் தொடர்பாக இதன்போது அதிகாரிகளிடம் விசாரித்த ஜனாதிபதி, உரிய அபிவிருத்தி திட்டங்களின் மூலமாக அந்த நிதியை மக்களின் நன்மை கருதி உரிய முறையில் செலவிடுதல் அரசியல் பிரதிநிதிகளினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.
Related posts:
|
|