அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுங்கள் – பாதுகாப்பு தரப்புக்குப் ஜனாதிபதி பணிப்பு!

Sunday, October 17th, 2021

அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வகையில் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி துறைசார் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்டபிடத்தக்கது.

Related posts: